பிரதமரை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட வடமாநில நபர் கைது

Author: kavin kumar
14 August 2021, 1:29 pm
Quick Share

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் , விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் உத்திர பிரதேச போலீசாரால் சென்னை மாதவரத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் மன்மோகன் மிஸ்ரா (62). இவர் கடந்த 30 வருடங்களாக மாதவரத்தில் வசித்து வருகிறார். மண்ணடி பகுதியில் பாரத் ஸ்வாதி மான் சுதேசி டிரஸ்ட்டை 7 வருடமாக நடத்தி வருகிறார். இவர் , முன் மோகன் மிஸ்ரா ( Munmohan Mishra ) என்ற இவருடைய யூடியூப் பக்கத்தில் , கொரோனா காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தும் , பிரதமர் மோடியை பற்றி விமர்சனம் செய்தும் வீடியோ பேசி சமூக வலைத்தளங்களில் கடந்த 7 ம் தேதி வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் , இது குறித்து , உத்திர பிரதேச மாநில காவல் துறை மன்மோகன் மிஸ்ரா மீது 8 ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார் மன்மோகன் மிஸ்ராவை தேடி வந்த நிலையில் , சென்னை மாதவரத்தில் இருப்பதை கண்டு பிடித்த உத்திர பிரதேச போலீசார் சென்னை மாதவரத்திற்கு வந்து வீட்டில் கைது செய்தனர். பின்பு மாதவரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடல் பரிசோதனை செய்யப்பட்டு உத்திர பிரதேச போலீசார் அம்மாநிலத்திற்கு அழைத்து செல்கின்றனர்.

Views: - 197

0

0