டிக்கெட் எடுக்காமல் பயணம்: ரயிலை பாதி வழியில் நிறுத்தி இறங்கிய வடமாநில தொழிலாளர்கள்..!!

Author: Aarthi Sivakumar
28 June 2021, 5:43 pm
Quick Share

கோவை: டிக்கெட் எடுக்காத காரணத்தால் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலை வட மாநில தொழிலாளர்கள் பாதி வழியில் நிறுத்திய சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று இரவு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் பீகாரை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

ரயில் சோமனூரை அடுத்த ராசிபாளையம் அருகே சென்று கொண்டுந்த போது சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இறங்கி ஓட முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வட மாநில மக்களை பிடித்தனர். மேலும், ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பீகார் மாநிலத்தில் இருந்து கோவைக்கு வேலை செய்வதற்காக வந்தவர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனையின் போது மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ரயிலைபாதி வழியில் நிறுத்தி இறங்கியுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் அபராதம் விதித்தும், எச்சரித்தும் அவர்களை திருப்பி அனுப்பினர்.

Views: - 157

0

0