புதுச்சேரி முதலமைச்சருடன் நார்வே நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சந்திப்பு

Author: kavin kumar
15 October 2021, 8:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நார்வே நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட முன்னாள் தலைவரும், நார்வே நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சருமான எரிக் சோல்ஹெய்ம் (Erik Solheim) முதலமைச்சர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது இந்தியாவிற்கான நார்வே தூதர் ஹன்ஸ் ஜேக்கப் ஃப்ரைடென்லுண்ட் (Hans Jacob Frydenlund) மற்றும் நார்வே நாட்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகர் ஜினா எலிசபெத் லுண்ட் ( Gina Elisabeth Lund) ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 247

0

0