அரசு அனுமதி கொடுத்த பிறகும் திருச்சியில் முக்கிய திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்படவில்லை…

Author: kavin kumar
23 August 2021, 1:53 pm
Quick Share

திருச்சி: புதுப்படங்கள் ஏதும் வெளிவராத சூழ்நிலையில் திருச்சியில் முக்கிய திரையரங்குகள் அனைத்தும் இன்றும் பூட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று காரணமாக நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. பேருந்து போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன. திரையரங்கு அனைத்து மூடப்பட்டது. தொடர்ந்து தொற்றுநோய் குறைந்து வருவது காரணமாக பொதுப் போக்குவரத்து தொடரப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்று காலை வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திரையரங்குகளில் 50% இருக்கைளுடன் சமூக இடைவேளையை பின்பற்றி பார்வையாளர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அறிவித்திருந்தது.

இந்தி நலையில் அரசு அறிவித்திருந்தாலும் புதுப்படங்கள் ஏதும் வெளிவராத சூழ்நிலையில்
பார்வையாளர்கள் குறைவாக மட்டுமே வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு திருச்சியில் உள்ள பெரும்பாலான திரையரங்குள் இன்றும் திறக்கப்படவில்லை. திருச்சி முக்கிய திரையரங்கம் ஆக கருதப்படும் சிந்தாமணி பகுதியில் உள்ள ரம்பா, ஊர்வசி – மத்திய பேருந்து நிலையம் அடுத்துள்ள கண்டோன்மென்ட் பகுதியில் செயல்படும் சோனா, மீனா, மெயின்கார்டுகேட் பகுதியிலுள்ள எல்.ஏ சினிமாஸ் உள்ளிட்ட முக்கிய திரையரங்குகள் அனைத்தும் இன்றும் பூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் கூறுகையில். பிரபலமான நடிகர்கள் நடித்த படங்கள் மற்றும் புதுபடங்கள் வெளிவந்தால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு ஆர்வமுடன் படத்தை காண வருவார்கள். எனவே பழைய திரைப்படங்களை தற்போது திரையிட்டாலும், பார்வையாளர்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியே? எனவே சில நாட்களுக்கு பின்னரே திரையரங்குகளில் திறக்க திட்டமிட்டுள்ளோம். என தெரிவித்துள்ளனர்.

Views: - 185

0

0