சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: ஆதரவாளர்களை கவலையில் ஆழ்த்திய அமைச்சர்

19 January 2021, 1:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு நடக்க உள்ள தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், சட்டசபையில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் அறிவித்து அவரது ஆதரவாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.

புதுச்சேரியின் ஏனாம் தொகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில் தொடர்ச்சியாக 25 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக மல்லாடி கிருஷ்ணா ராவ் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 3 முறை அமைச்சராக பணியாற்றிய மல்லாடி கிருஷ்ணா ராவ் தற்போது 3 வது முறையாக சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக 25 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 3வாது முறை சிறந்த சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு சட்டப்பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

சட்டப்பேரவை மைய மண்டபத்தில் நடைபெற்ற பாரட்டு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றுக் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேரவையில் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னதாக பேரவையில் பேசிய மல்லாடி கிருஷ்ணா ராவ் எதிர் வரும் சட்டமன்ற தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Views: - 0

0

0