கொரோனா பரிசோதனைக்கு இவர்கள் எல்லாம் வரலாம்… எஸ்ஆர்எம் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு…

1 August 2020, 8:25 pm
Quick Share

செங்கல்பட்டு: எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 18 வயது முதல் 55 வரை உடல் ஆரோக்கியம்  ஆர்வமுள்ளவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளலாம் என எஸ்ஆர்எம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
   
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவமனையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  கொரோனா மருத்துவ தடுப்பூசி பரிசோதனை துவங்கப்பட்டது .அதன் தொடர்ச்சியாக தற்போது தடுப்பூசி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள  18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும் ஆர்வமுள்ளவர்கள்  மருத்துவ தடுப்பூசி பரிசோதனை செய்துகொள்ள பங்கு கொள்ளலாம் என எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 34

0

0