ஓபிஎஸ் மனைவியின் உடல் தகனம்.. கட்சியினர், பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதி மரியாதை..!!!

Author: Babu Lakshmanan
2 September 2021, 6:52 pm
OPS wife final - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் உடல் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிலையில், பெரிய குளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெரியகுளத்தில் உள்ள நகராட்சி மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அவரது உடலுக்கு மூத்த மகனும், எம்பியுமான ரவீந்திரநாத் அவரது அம்மாவின் சடலத்திற்கு தீ மூட்டினார்.

Views: - 250

0

0