நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை: கணக்கில் வராத ரூபாய் 25 ஆயிரத்து 880 ரூபாயை பறிமுதல்

9 July 2021, 4:57 pm
Quick Share

திருவள்ளூர்: கச்சூர்பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூபாய் 25 ஆயிரத்து 880 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக நெல் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அடுத்தது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சென்னை பிரிவு 2 காவல் துணை கண்காணிப்பாளர் லாவகுமார், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் ஆய்வுக்குழு அலுவலர்கள் தலைமையில் 10 அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத 25 ஆயிரத்து 880 ரூபாய் பறிமுதல் செய்தனர்நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த சுந்தராஜன் நரேஷ் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 43

0

0