மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீரென ஆய்வு

Author: Udhayakumar Raman
27 October 2021, 6:52 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடியில் மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை அதிகாரிகள், உணவுத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை ஆய்வாளர் மனுநீதி சோழன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் முருகேசன் , கர்ணன் ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் 8 மொத்த விற்பனைக் கடைகளிலும், 15 சில்லறை விற்பனைக் கடைகளிலும் ஆய்வு செய்ததில், மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க மீன்களில் ஃபார்மலின் தடவி இருக்கிறார்களா அல்லது ரசாயனம் தடவப்பட்ட உள்ளதா என மீன்களை ஆய்வு செய்தனர் .மீன் கெட்டுப்போன மீன்களோ அல்லது ரசாயனம் தடவப்பட்ட மீன்களோ விற்பனை செய்வது தெரிய வந்தால் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Views: - 191

0

0