பூங்கா அமைப்பதில் ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்…

Author: kavin kumar
12 August 2021, 6:31 pm
Quick Share

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைப்பதில் ஒரு தலைபட்சமாக அதிகாரிகள் செயல்பட்டதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை பெரம்பூர் நெல்வயல் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 200 அடி நீளம் கொண்ட இடம் உள்ளது. இந்த இடத்தில் அரசமரம் அடியில் விநாயகர் கோயில் ஒன்று நிறுவப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அந்த கோயிலானது அப்புறப்படுத்தப்பட்டது.இதனையடுத்து மாநகராட்சி சார்பில் அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே அந்த பூங்கா அமைக்கும் பணியின் போது , இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான தொழிலும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த பூங்கா அமைக்கும் பணியில் சுற்றுச் சுவர் எழுப்பும் பணி நடைபெற்றுக் கொண்டு வந்த நிலையில் அதில் சென்னை மாநகராட்சி மண்டலம் 6 க்கு உட்பட்ட அதிகாரிகள் அந்த கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ஒருதலைபட்சமாக 200 அடி நீளம் கொண்ட சுற்றுச்சுவரில் 100 அடி நீளத்திற்கு மட்டுமே சுவரினை கட்ட ஏற்பட்டு வருவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில்,முழுவதுமாக 200 அடிக்கும் சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 156

0

0