திறக்காத கடைகளுக்கு வாடகையை கேட்கும் அதிகாரிகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு

Author: Udhayakumar Raman
1 July 2021, 1:57 pm
Quick Share

திருச்சி: காந்தி மார்க்கெட்டில் திறக்காத கடைகளுக்கு வாடகையை வசூல் செய்வதை அதிகாரிகள் நிறுத்த கோரி வியாபாரிகள் மனு அளித்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கட்டட கடைகள் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடையில் உள்ளன. கொரோன தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் பேரில் கடந்த மாதம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த மாதம் முழுவதும் திறக்கப்படாத கடைகளுக்கு வாடகை செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். இதனை கண்டித்து இன்று காலை திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ வர்த்தக அணி பிரிவின் மாவட்டத் தலைவர் பக்ருதீன் தலைமையில்

வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியனை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் கடந்த ஒரு மாதமாக திறக்கப்படாத கடைகளுக்கு அதிகாரிகள் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் மேலும், கடந்த 40 நாட்களுக்கு அதிகமாக இன்றுவரை வாழ்வாதார இழந்து நிற்கின்ற எங்களுக்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 129

0

0