மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வதில் அதிகாரிகள் பாரபட்சம்: அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

1 March 2021, 6:54 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி அருகே மேலவாசல் கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வதில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி பெண்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்தின் மூலம் மேலவாசல், எம் பேத்தி,உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 9 மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் பெற்றிருந்தனர். இவர்களில் 6மகளிர் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செம்பருத்தி,தென்றல்,

அர்த நாரிஸ்வரர் உள்ளிட்ட 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என கூறி பெண்கள் மேல வாசல் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு மையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து வேளாண் கூட்டுறவு மைய செய்யளர் சேகர் 7நாட்களில் விடுபட்ட மகளிர் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Views: - 9

0

0