இரும்பு ஆலையில் ஆயில் குழாய் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

7 February 2021, 7:53 pm
Quick Share

செங்கல்பட்டு: இரும்பு ஆலையில் பாதுகாப்பு கவசம் அணியாமல் வேலை செய்த தொழிலாளர்கள் மீது ஆயில் குழாய் வெடித்து தெறித்ததில் இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டு ரோடு அருகே பேஃ போர்ஜ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். கடந்த 2ஆம் தேதி இரும்புகளுக்கு அச்சு பதியும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தத போது ஆயில் குழாய் வெடித்து அதிலிருந்து இரும்பு குழம்பு தெறித்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது பட்டது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழ்ச்செல்வன் (வயது 24) மற்றும் செல்வமணி (வயது 20) இருவரின் உடலிலும் தீ பிடித்து எரிந்தது. இரும்பு குழம்பு தெறித்ததில் உடல் முழுவதும் வெந்த நிலையில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் இதில் சிகிச்சை பலனின்றி புலிப்புரப்புகோவில் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வனின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிலாவட்டம் பகுதியை சேர்ந்த செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிறுவனத்தில் அரசின் விதிமுறைகளை மீறி வேலையாட்களுக்கு முறையான பாதுகாப்பு கவசம் கொடுக்காமலும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. படாளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0