வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் கழுத்து அறுத்து கொலை!

Author: Udayaraman
6 October 2020, 11:24 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சந்திகுப்பத்தில் மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சந்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டியான ஐய்யம்மாள். இவருக்கு 5 பெண் பிள்ளைகள் மற்றும் 1 மகன் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். சந்திகுப்பம் பகுதியில் தனியாக வசித்து வரும் ஐயம்மாளுக்கு அருகில் இருப்பவர்கள் தினமு‌ம் உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பக்கத்து வீட்டு பெண் அவருக்கு உணவு கொடுக்க சென்ற போது ஐய்யம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொலை நடந்த சம்பவம் தமிழக பகுதி என்பதால் கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஐய்யம்மாளின் எதிர் வீட்டில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கும் ஐய்யம்மாளுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 53

0

0