மூதாட்டி தீக்குளித்து தற்கொலை… இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்…

10 August 2020, 9:08 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த செதில்பாக்கம் ஊராட்சியில் வசித்து வருபவர் ரோஜா. இவரின் குடும்பத்தாருக்கும் இவரின் உறவினர் குமார் என்பவருக்கும் கடந்த 6 ம் தேதி இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் ரோஜாவின் மகன், மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி முன்னாள் கவுன்சிலர் குமார், மைக்கேல், ஆகாஷ், தினேஷ், மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட ரோஜாவின் குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் மனமுடைந்த மூதாட்டி ரோஜா நேற்று மதியம் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதிரிவேடு காவல்துறையினர் ரோஜாவை மீட்டு சென்னை அரசு கேஎம்சி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தன. பின்னர் ரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ரோஜாவின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே சடலத்தை மருத்துவமனையில் இருந்து பெறுவதாக உறவினர்கள் தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சமரசம் மேற்கொண்டு உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Views: - 23

0

0