12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்… தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்…

6 August 2020, 10:46 pm
Quick Share

வேலூர்: வேலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அப்பகுதி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை ரோடு அருகே உள்ள மௌனகுரு சாமி கோவில் தெருவில் கரிகரி பகுதியை சேர்ந்த ஜோசப் (65) என்பவர் தையல் கடை வைத்துள்ளார். மேலும் அவர் அந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர் சிறுமியருக்கு தையல் பயிற்சியும் கொடுத்து வந்துள்ளார். இன்று அந்த கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து ஜோசப்புக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் ஜோசப் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல்துறையினர் ஜோசப் ஐ மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து பின்னர் காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அப்பகுதி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0