ஒற்றை காட்டு யானை மிதித்து முதியவர் பலி:கடந்த 3 நாட்களில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Author: Udhayakumar Raman
12 September 2021, 7:51 pm
Quick Share

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே ஒற்றை காட்டு யானை மிதித்து முதியவர் உயிரிழந்ததையடுத்து கடந்த 3 நாட்களில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் உள்வட்டம் 66 பச்சப்பனட்டி தரப்பு மற்றும் கிராமத்தைச் சேர்ந்த லேட் முனியப்பா என்பவரின் மகன் வெங்கடேஷ் வயது 68 என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக காலை சுமார் 5 மணி அளவில் கிராமத்தின் அருகில் உள்ள சாலை வழியே கடக்கும்போது ஒற்றை யானை மிதித்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது தொடர்பாக கெலமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் உடல்நிலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வேப்பனப்பள்ளி அருகே விவசாயிகளை மிதித்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது எனவே இந்த ஒற்றை யானையால் கடந்த 3 நாட்களில் 3 பேர் பலியான சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

Views: - 147

0

0