ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்: நாராயணசாமி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

5 February 2021, 3:41 pm
Quick Share

புதுச்சேரி: மத்திய அரசு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற கோரி புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும் மேலும் மத்திய அரசு கிரண்பேடியை திரும்பப்பெற கோரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அண்ணா சிலை அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கமியூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Views: - 0

0

0