குளத்தில் மூழ்கி ஒருவர் பலி; போலீசார் விசாரணை!!

Author: kavin kumar
10 October 2021, 3:33 pm
Quick Share

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகையூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் மிதப்பதாக அரகண்டநல்லூர் போலீசார் மற்றும் திருக்கோவிலூர் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினர்; முதியவரின் உடலை மீட்டனர். இதில், அந்த முதியவர் முகையூர் அருகிலுள்ள கொடுங்கால் கிராமத்தை சேர்ந்த சாவிது ( 53) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் சாவிதுவின் உடலை கைப்பற்றி பிரேத பிசோதனைக்காக விழுப்புரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 104

0

0