கரூரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது:போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்

By: Udayaraman
2 October 2020, 11:02 pm
Quick Share

கரூர்: “கானகத்து கரூர்” என்ற திட்டத்தின் கீழ் கரூரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கரூர் திருவள்ளுவர் மைதானத்திலிருந்து தனியார் மண்டபத்திற்கு ஏராளமான இளைஞர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் மரம் நடுவதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியும் வந்தனர். மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த தான் அகத்துக்குள் கரூர் என்கின்ற திட்ட இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்,

“கரூர் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரம் மரக்கன்றுகள் அல்ல மரம் நடப்பட்டுள்ளது நகரப்பகுதிகளில் மகிழமரம் என்கின்ற மரம் நடப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் வாகை வேம்பு போன்ற ஒரு லட்சம் மரங்கள் நட உள்ளது. கொரோனா பேரிடர் காலங்கள் முடிந்த பின்னர் கரூர் மாவட்டத்தில் யு.பி.எஸ் சி., டிஎன்பிசி, குரூப் 1, குரூப் 2, குரூப் 3 போன்ற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இன்று 10 ஏழை கிராம மாணவர்களின் கல்வி உதவித் தொகையாக தலா 25,000மும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் மையப் பகுதியான சிறிய மாவட்டமாக இருந்தாலும் கரூர் பல துறைகளிலும் முன்னேறிய மாவட்டமாக அரசுக்கு வருவாய் தரக்கூடிய ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் கடுமையாக உழைக்கக் கூடிய மக்களை, கரூர் மாவட்டத்தை தேடி, நாடி வருகின்றனர். காரணம் வேலைவாய்ப்பு வாழ்வாதாரத்திற்கு உறுதியான ஒரு நிலையை கரூர் திருப்பூர் கோவை மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 46

0

0