மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

2 September 2020, 10:18 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கால்நடைக்கு தீவனம் சேகரிக்க சென்ற முதியவர் உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சென்ராயன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க அருகிலுள்ள வயல்வெளியில் சென்றபோது அங்கே உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை அறியாமல் அதில் சிக்கி முதியவர் துரைசாமி சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பென்னலூர் பேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 7

0

0