செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

22 September 2020, 4:49 pm
Quick Share

சென்னை: செங்குன்றம் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் ராஜேஷ் என்பவர் குடும்பத்துடன் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு தூங்கும் போது வைத்திருந்த 2 செல்போன்கள் மற்றும் 10 , 000 ரூபாய் காலையில் எழுந்த போது திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பாடியநல்லூரை சேர்ந்த முகமதுகனி செல்போன், பணம் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் முகமதுகனியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.