விமான நிலையத்தில் ரூ 80 லட்சம் வௌிநாட்டு கரன்சியுடன் ஒருவர் கைது…

Author: Udhayakumar Raman
23 September 2021, 5:59 pm
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளை சார்ஜாவுக்கு கடத்தி செல்ல முயன்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் சார்ஜா புறப்பட்டு செல்வதற்காக பயணிகள் வந்தனர். விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்ட ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, .80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், துபாய் திராம்ஸ் வைத்து இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் சரவணன் என இந்த தெரியவந்தது. மேலும், அவர் வெளிநாட்டு கரன்சிகளை சார்ஜாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 124

0

0