சட்டவிரோதமாக பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு…

1 August 2020, 8:13 pm
Quick Share

வேலூர்: வேலூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த காசிமா நகர் மொத்தாக்கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் தற்போது நிலக்கடலையை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள மலை பகுதிகளில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை பயிரை நாசம் செய்வதால் தனது நிலத்தில் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த ராஜசேகரன்(38) என்பவர் அவ்வழியே செல்லும் போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி எதிர்பாராத விதமாக ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதை காலையில் சென்று பார்த்த நிலக்கடலை பயிரிட்ட ராஜேந்திரன்(53) காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்காமல் அருகில் உள்ள ஓடை கால்வாயில் வீசியுள்ளார். பின்னர் தகவல் அறிந்து வந்த வேலூர் தாலுக்கா காவல் துறையினர் உடலை மீட்டு பீரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து நிலத்தில் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்த நில ராஜேந்திரன்(53) என்பவர் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரது அண்ணண் அண்ணாமலை என்பவரை தேடி வருகின்றனர்.

Views: - 6

0

0