இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள்… தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு…
3 August 2020, 8:45 pmதிருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இருப்பினும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்த வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி இருந்தது.இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இதனிடையே கடந்த ஜூன் 22ம் தேதி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்து.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக தேர்வுகள் கட்டுப்பாட்டு துறை அலுவலர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் இதனை துறை தலைவர்களே இதற்கான தேதியை முடிவு செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.