கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதல் மையம் திறப்பு

4 November 2020, 9:24 pm
Quick Share

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் ரூ.37.67லட்சம் மதிப்பீட்டில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதல் மையத்தை புதுடெல்லியிலிருந்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஷர்ஷ்வர்தன் காணொலி காட்சி முலம் இன்று திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் உள்ளது. நாட்டின் தென்மாநில பகுதிகளில் பேரிடர்கள் ஏற்படும் காலங்களில் இங்கிருந்து இப்படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவர். இந்த மையத்தில் உள்ள சிலர் கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்துதல் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையின் புதுடெல்லி தலைமையகமும் தில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமும் இணைந்து அரக்கோணம் மையத்தில் ரூ.37.67 லட்சத்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதல் மையத்தை கட்டின. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று மதியம் நடைபெற்றது. இதற்காக புதுடெல்லி தேசிய பேரிடர் மீட்பு படை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஷர்ஷ்வர்தன் காணொலி காட்சி முலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் இப்படையின் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் தலைமை இயக்குனர் சேகர் சி.மாண்டி ஆகியோர் பங்கேற்றனர்கள். இதை முன்னிட்டு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படையின் சினியர் கமாண்டர் ரேகா நம்பியர் தனிமைப்படுத்துதல் மையத்தை ரிப்பன் வெட்டியும் கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த மையத்தில் அதிநவீன உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள்,

செவிலியர்கள் குழு அமைக்கப்பட்டு்ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மைய டிஐஜி வினய் காஜீலா மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 21

0

0