புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் கண்காட்சி துவக்கம்

6 February 2021, 2:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வேளாண் திருவிழா என்ற பெயரில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் சார்பில் தோட்டக்கலைப் பிரிவில் உற்பத்தி செய்யப்பட்ட மலர்கள் மற்றும் அலங்கார செடிகள் மட்டுமே தாவரவியல் பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,

இந்த வேளாண் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது, கொரோனா பெருந்தொற்று காரணமாக விரிவாக நடைபெறும் மலர், காய் மற்றும் கனி கண்காட்சிக்கு பதிலாக, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மலர் உற்பத்தி, காய்கறி சாகுபடித் தொழில் நுட்பங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு ஒரு சிறிய நிகழ்வாக நடத்தப்பட்டது.

Views: - 0

0

0