உதகை நகராட்சி சந்தை சுழற்சிமுறையில் திறப்பு: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
29 June 2021, 3:57 pm
Quick Share

நீலகிரி: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த உதகை நகராட்சி சந்தை ஏ பி சி என்ற சுழற்சிமுறையில் திறக்கப்படவுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் உழவர் சந்தை மற்றும் நகராட்சி தினசரி சந்தைகள் மூடப்பட்டன. அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நகராட்சி தினசரி சந்தை மூடப்பட்டிருக்கும் நிலையில் நீலகிரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நகை மற்றும் துணி கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக உதகை நகராட்சி தினசரி சந்தை திறக்கப்படாமல் இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்ததையடுத்து ஏபிசிடி என்ற சுழற்சிமுறையில் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இதனிடையே இன்று உதகை நகராட்சி அதிகாரிகள் தினசரி சந்தையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சுழற்சி முறையில் திறக்கும் வகையில் ஏ பி சி என்ற வில்லைகளை ஒட்டினர். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள வழி நெறிமுறைகளின்படி உதகை நகராட்சி தினசரி சந்தை திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Views: - 95

0

0