அரசு நலத்திட்டங்கள் பெற தடுப்பூசி சான்றிதழ் கேட்க வாய்ப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

Author: kavin kumar
25 October 2021, 5:56 pm
Quick Share

புதுச்சேரி: பல்வேறு உலக வெளிநாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் அனைவரும் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வரும் காலங்களில் அரசு நலத்திட்டங்கள் பெற தடுப்பூசி சான்றிதழ் கேட்க வாய்ப்புள்ளது என புதுச்சேரியில் தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதர நிலையங்கள் உட்பட 102 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. தவளக்குப்பம் பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர், புதுச்சேரியில் ஏற்கனவே 80 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவீத பேருக்கு இன்று தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும்,

சீனா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், ராணுவ வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த அலட்சியம் காட்டாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். பல்வேறு நாடுகள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியுமா என்று கேள்வி எழுப்பிய நிலையில் அதை இந்தியாவில் சாதித்துக்காட்டுயுள்ளோம். மேலும் தடுப்பூசியில் இந்தியா 100 கோடியை தாண்டியுள்ளோம், இது ஒரு வரலாற்று சரித்திரம் என தெரிவித்த தமிழிசை,

புதுச்சேரியில் 100% தடுப்பூசி போட வேண்டும் இதற்காக அனைவரும் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது வெளிநாடுகளுக்கு செல்லவும், பல்வேறு வேலைகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கேட்கப்படுகிறது. வரும் காலத்தில் பல திட்டங்களுக்கு தடுப்பூசி ஆவணங்களை கேட்கலாம். அப்போது தடுப்பூசி போட மக்கள் அலைய வேண்டியதை தவிர்க்க வேண்டும் என்றால் உடனடியாக அனைவரும் தடுப்பூசி இப்போதே செலுத்திக்கொள்ளுங்கள் என்றார்.

Views: - 232

0

0