வேதம் ஓதும் பாடசாலைகளில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: மக்களை சமாதானப்படுத்திய போலீசார்…

1 September 2020, 11:07 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அருகே வேதம் ஓதும் பாடசாலைகளில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வந்ததால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு போலீசார் வருவாய் துறையினர் சமரசம் செய்து வைத்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கசம் கொல்லை மேடு பகுதியில் இயங்கிவரும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை வலியுறுத்தும் மெய்வழி வேதம் ஓதும் பாடசாலை மெய்வழி சபை இயங்கி வருகின்றது. அந்த இடத்தில் இன்று சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்த இறந்தவர் ஒருவரை கோவில் வளாகத்தின் பின்புறம் புதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதை அறிந்த அப்பகுதி மக்கள் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ள இடத்தில் பிணத்தை புதைக்க கூடாது என்று ஊர்மக்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுதும் பொதுமக்களும் எதிர் தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இறந்தவரின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் போலீசார் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வட்டாட்சியர் பாலமுருகன் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நான்குமணி நேரம் கழித்து நேரில் வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி இறந்தவரின் சடலத்தைப் அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர். மேலும் இதுகுறித்து இரு தரப்பினரும் நீதிமன்றம் மூலமாக அணுகி இதற்கான தீர்வை காண அறிவுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்குமணி நேரமாக இறந்தவரின் சடலம் புதைக்காமல் சாலையில் ஆம்புலன்சில் நின்றுக்கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 0

0

0