முத்தரையர் சிலையை பாலம் பணிக்காக அகற்ற எதிர்ப்பு: வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

Author: Udhayakumar Raman
13 September 2021, 1:54 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் உள்ள முத்தரையர் சிலையை பாலம் பணிக்காக அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்சியில் போக்குவரத்தை சீர் படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் காந்தி மார்கெட் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் உயர்மட்ட பாலம் பணிக்காக ஒத்தக்கடை ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள முத்தரையர் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க கூடாது என வலியுறுத்தி திருச்சி ஒத்தக்கடை முத்தரையர் சிலை முன்பு வீர முத்தரையர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தங்களது அடையாளத்தை அளிக்க கூடாது எனவும், தமிழக அரசு இதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 124

0

0