வாக்காளர்களை வேறு வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு : வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி பொதுமக்கள் போராட்டம்

Author: kavin kumar
19 January 2022, 2:08 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் வார்டினை பிரித்து 424 வாக்காளர்களை வேறு வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சியை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி 1வது வார்டு பெரியகாவனம் வேதகிரிதெருவில் வசிக்கும் 424 பேரை 2வதுவார்டில் வாக்களர்களாக மாற்றி இணைத்ததால் தங்களது வாக்காளர் அடையாள அட்டை வீசி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பழைய முறைப்படி தங்களை 1வது வார்டில் வாக்காளர்களாக மீண்டும் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். புதிய வார்டில் தங்களை இணைப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்,

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் புகார் தெரிவித்திருந்த நிலையில், தங்களுடைய பிரச்சனை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தலில் யாரும் வாக்களிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். நகராட்சி ஆணையர் தனலட்சுமி மற்றும் பொன்னேரி காவல்துறையினர் உரிய தீர்வு காண்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

Views: - 126

0

0