காவல்நிலையங்களுக்கு தேவையான ஆக்ஸிமீட்டர்களை கொரோனா நிதியிலிருந்து வாங்க உத்தரவு

By: Udayaraman
8 October 2020, 11:34 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள காவல்நிலையங்களுக்கு தேவையான ஆக்ஸிமீட்டர்களை கொரோனா நிதியிலிருந்து வாங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வாட்ஸ்அப்பில் வெளியிட்ட தகவலில், சுகாதாரத்துறையில் பணிபுரிவோர் விவரங்கள் போதுமானதா அதில் ஏதும் முன்னேற்றங்கள் தேவையா என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக க்குழு (ஐசிஎம்ஆர்) ஆய்வு செய்யும். கொரோனா தொற்று இறப்புகளை ஐசிஎம்ஆர் குழு ஆராய வேண்டும்.

காவல்நிலையங்களுக்கு தேவையான ஆக்ஸிமீட்டர்களை கரோனா நிதியிலிருந்து வாங்க வேண்டும். உள்ளாட்சித்துறை இதில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பயோ கழிவுகளுக்கான வண்ணத்தொட்டிகளை மருத்துவத்துறை வாங்க வேண்டும். சுகாதாரத்துறையில் பிரேத்யேகமாக சிசிவிடி பொருத்துவது தொடர்பாக டிஜிபி, உள்ளாட்சித்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 30

0

0