போலி அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கிய இருவர் கைது

22 September 2020, 10:24 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் போலி அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கிய இருவரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பொறியாளர் பட்டதாரியான இவருக்கு அந்தியூரை சேர்ந்த தனியார் பள்ளி கணக்கு ஆசிரியரான சரவணனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேலையில்லாமல் இருந்து வந்த சந்தோஷ்க்கு சரவணன் ஈரோடு கொல்லம்பாளையம் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி காலியாக இருப்பதாகவும் இதற்காக 7 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். முதலில் இரண்டு லட்சம் ரூபாயை நியமன ஆணை கிடைத்ததும் மீதமுள்ள பணத்தை பணியில் சேர்ந்தவுடன் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணிநியமன ஆணையை வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளார் சரவணன். பணி நியமன ஆணை குறித்து சந்தேகமடைந்த சந்தோஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

சரவணன் வழங்கிய ஆணையில் போலியாக மாவட்ட முதன்மை அலுவலர் பாலமுரளியின் கையெழுத்து போடப்பட்டிருப்பதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது ‌. இது குறித்து விசாரணை நடத்தி வந்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சரவணனை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு மூளையாக இருந்து செய்யப்பட்டு வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் தெய்வசிகாமணி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.பொதுமுடக்கம் காரணமாக வேலையின்றி தவிப்பவர்களை குறி வைத்து நடத்திய முதல் முயற்சியிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0