அமோகமாக நடைபெறும் கள் விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறை

5 March 2021, 8:54 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில், பனை மரங்களிலிருந்து கள்ளத்தனமாக இறக்கப்படும் கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பெரியகோட்ட பள்ளி, பெத்தனப்பள்ளி, எம் சி பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நூற்றுக்கணக்கான பனை மரங்களில், பானைகள் கட்டி கள்ளத்தனமாக கள் இறக்கப்படுகிறது. அவற்றை அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்த மக்களும் போதைக்காக அருந்தி வருகின்றனர்.

ஆனால் இதில், அதிக போதை வரவேண்டும் என்பதற்காக, பல்வேறு வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் கூறப்படுகிறது. இதனை அறியாமல் போதைக்காக குடித்து வரும் மக்கள், பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தாலும், என்ன காரணத்திற்காகவோ, அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Views: - 1

0

0