நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சப்பள்ளி சின்னாறு அணை திறப்பு:விவசாயிகள் மகிழ்ச்சி

Author: Udhayakumar Raman
7 December 2021, 4:26 pm
Quick Share

தருமபுரி: பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பி உபரி நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தொடர் மழையின் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் மலர் தூவி திறந்து சின்னாறு அனையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ், தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
50 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 48 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 187 கன அடியாக உள்ளது,

தற்போது முதல் கட்டமாக 70 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது. தண்ணீர் திறப்பதற்கு முன் கரையோர பொதுமக்களுக்கு தண்டோர போட்டு தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அணை திறக்கப்பட்டு பாய்ந்து வரும் தண்ணீரை காண விவசாயிகளும் , பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

Views: - 195

0

0