அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி மன்ற தலைவர்: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

5 July 2021, 1:59 pm
Quick Share

திண்டுக்கல்: பல மாதங்களாக அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி சேர்ந்தவர் பரமன். இவர் திமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்த பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 89

0

0