ஊராட்சி மன்ற செயலர் தவறி விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
23 July 2021, 1:28 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே ஊராட்சி மன்ற செயலர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தெற்குப்பட்டி செல்லும் சாலை வளைவில் பள்ளத்தில் தவறி விழுந்து நல்லமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற செயலர் உயிரிழப்பு சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நல்ல முத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் செந்தில்குமார் (50). இவர் உப்பத்தூர் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அலுவக வேலை காரணமாக சாத்தூருக்கு வந்துவிட்டு தனது அக்கா ஊரான சடையம்பட்டிக்கு செல்வதற்காக நேற்று இரவு நடந்து சென்றுள்ளார்.

தெரு விளக்கு இல்லாததால் இருட்டில் சாலையின் வளைவில் ஓரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செந்தில்குமாரின் சகோதரி ஆவுடை தங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 143

0

0