தங்க நகை திருடிய வழக்கில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கைது

22 September 2020, 5:24 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க நகை திருடிய வழக்கில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் வசித்து வரும் அன்சாரி என்பவரது மனைவி சபீரா வீட்டை பூட்டி கொண்டு அருகில் உள்ள நியாய விலைக்கடைக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13.5சவரன் நகை, 1500ரூபாய் பணம் கடந்த 13 ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சபீரா கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், அன்சாரிவுடன் குடும்ப நண்பராக நெருங்கி பழகி வந்த தேர்வழி ஊராட்சி வார்டு உறுப்பினரான ராஜேஷ்கண்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜேஷ்கண்ணா திருடும் இடத்தில் அவருடைய செல்போன் சார்ஜரை விட்டுச் சென்றதால் அதை வைத்து போலீசார்
விசாரணை நடத்தியதில், ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினராக இருக்கும் ராஜேஷ் கண்ணாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றதாகவும், பணிக்கு ஏதும் செல்லாத நிலையில் குடும்ப சூழல் காரணமாக திருடியது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்த நகைகளை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 1

0

0