வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மனு…

13 August 2020, 3:36 pm
Quick Share

விருதுநகர்: நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு கொரோனா நிவாரண நிதியை மக்கள் தொகைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் 44 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன இந்த பஞ்சாயத்துகளில் புதிதாக பதவியேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி வேறுபாடு இன்றி அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். தற்போது மூன்று கிராமங்களுக்கு மட்டும் கொரோனா நிதியை வழங்கி இருப்பதாகவும், கொரோனா நிவாரண நிதியை கிராமங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து வழங்க வேண்டுமெனவும், மேலும் நூறு நாள் வேலைத்திட்ட நீதியையும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெயரில் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மனுவாக அளித்தனர்.