டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுப்பாட்டிலில் மிதந்த பேப்பர்: மதுப்பிரியர் அதிர்ச்சி

6 July 2021, 2:31 pm
Quick Share

மதுரை: மதுரையில் மதுப்பாட்டிலில் பேப்பர் மிதக்கும் சம்பவம் மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் ஜூன் 14 ம் தேதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனையானது அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் சத்திரபட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ரஞ்சித்குமார் என்பவர் வாங்கிய மதுபாட்டில் ஒன்றில் பேப்பர் மேலும் கீழும் மிதந்துள்ளது. 120 ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த மதுப்பாட்டிலில் பேப்பர் ஒன்று மிதந்தை கண்ட ரஞ்சித்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். அரசு மதுபானக் கடையில் வாங்கப்பட்ட மதுப்பாட்டிலில் கலப்படம் செய்தது போல பேப்பர் மிதந்தது மன வேதனையை தருவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர் ரஞ்சித் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே மதுரையில் தரமற்ற மலிவான மதுவகைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்போது மதுப்பாட்டிலில் பேப்பர் மிதக்கும் சம்பவம் மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 102

0

0