பொங்கலை கொண்டாடிய துணை ராணுவப் படையினர்

14 January 2021, 3:50 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படையினர் தமிழரின் திருவிழாவான பொங்கலை கொண்டாடினர்.

தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது 300க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் தற்போது வரை ஆளுநர் மாளிகை மற்றும் சட்டப்பேரவை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படையினர் கலங்கரை விளக்கு பகுதியில் உள்ள கடற்கரை அருகே பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

Views: - 6

0

0