தேவாலய நிர்வாகிகளுடன் ரகளையில் ஈடுபட்ட மதபோதகர் கைது: கொலை மிரட்டல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு..!!

Author: Aarthi
28 July 2021, 1:49 pm
Quick Share

கோவை: தேவாலய நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதபோதகர் கைது செய்யப்பட்டு அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை பந்தய சாலையில் உள்ள சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாக குழு கூட்டம் கடந்த 19ஆம் தேதி பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் நிர்வாக குழு உறுப்பினரான வழக்கறிஞர் நேசமெர்லின் தாக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போதகர் சார்லஸ் சாம்ராஜ் வில்சன் குமார் உள்பட 15 பேர் மீது பந்தயக் நிலைய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், செயலாளர் ஜேக்கப் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞரின் நேச மர்லின் மற்றும் அமிர்தம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து போதகர் சார்லஸ் சாம்ராஜ் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த மோதல் தொடர்பாக கோவை திருமண்டல நிர்வாகக்குழு போதகர் சார்லஸ் சாம்ராஜ் பணியிடை நீக்கம் செய்தி வெளியிட்டது.

இதற்கான நடவடிக்கையை கோவை திருமண்டல பிஷப் திமோத்தி ரவீந்தர் கொடுத்திருந்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து பந்தய சாலையில் உள்ள தேவாலயத்தில் திருமண்டல நிர்வாகிகளுடன் சார்லஸ் சாம்ராஜ் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து திரு மண்டல நிர்வாகிகள் பந்தய சாலை காவல் நிலையம் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் அத்துமீறல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின்கீழ் சார்லஸ் சாம்ராஜ் கைது செய்யப்பட்டார்.

Views: - 112

0

0