மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மயில்: பாதுகாப்பாக மீட்ட வனத்துறை

13 July 2021, 5:31 pm
Quick Share

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்தியாவின் தேசிய பறவை மயில் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் விளை நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிர்வாழ்கின்றன. இன்று மதுரை பழங்காநத்தம் ஊர் கால சாமி கோவில் அருகில் மின்கம்பத்தில் மயில் ஒன்று மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் சுப்ரமணியபுரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் விரைந்து வந்து ஊர்வன அமைப்பின் உதவியுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்து மயிலை மீட்டு மதுரை தல்லாகுளம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு கால்நடை மருத்துவர்கள் மயிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்பின் மயில் நலமுடன் இருப்பதாக அரசு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் தேசிய பறவை மயில் மின்கம்பத்தில் மட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சம்பவம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 97

0

0