கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம்

Author: Udhayakumar Raman
12 March 2021, 3:14 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் முககவசம் அணியாத நபர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்திருந்தார். தற்போது வரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத 150க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 22லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் மாநகராட்சி அலுவலர்களுடன் வ உ சி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி மற்றும் பழ சந்தை, உணவகங்கள் மற்றும் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதில் முககவசம்,தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி போன்ற தடுப்பு நடவடிக்கை இல்லாத நபர்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார்.

Views: - 120

0

0