நோய் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத தனியார் வங்கிக்கு அபராதம்

By: Udayaraman
1 October 2020, 8:00 pm
Quick Share

நீலகிரி: உதகை நகரில் நோய் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத தனியார் வங்கிக்கு ரூ 5 ஆயிரம் அபராதமும் வியாபார நிறுவனங்களுக்கு 500 அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அரசு கொரோனா அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில் அக்டோபர் 31ம் தேதி வரை கட்டுப் பாடுகளுடன் கூடிய பொது ஊரடங்கு நீடிக்கும் என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் 50 முதல் 200 ரூபாய் வரை அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி துறையினர் கொரோணா வைரஸ் தொற்றின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத சமுக இடைவெளியின்றி செயல்படும் நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதித்தும் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று உதகமண்டலம் நகராட்சி அதிகாரிகள் உதகை நகராட்சிக்குட்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சமூக இடைவெளி கடைபிடிக்காத வங்கிக்கு 5 ஆயிரமும் கடைகளுக்கு ரூபாய் 500 முதல் அதற்கும் அதிகமான அபராதங்கள் விதித்தனர். மேலும் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 35

0

0