தனியார் குடிநீர் தொழிற்சாலையை மூட கோரி மக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம்

16 September 2020, 5:06 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பூத்துறையில் நிலத்தடி நீரை அதிகளவில் ஊறிஞ்சும் தனியார் குடிநீர் தொழிற்சாலையை மூட கோரி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பூத்துறை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான குடிநீர் தொழிற்சாலையில் அதிகளவில் நிலத்தடி நீர் ஊறிஞ்சப்படுவதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இதுகுறித்து தாசில்தார், மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலைநில் இன்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது குடிநீர் நிலையத்தை அப்பகுதியில் இருந்த அகற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

Views: - 7

0

0