சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் மக்கள்…

Author: Udhayakumar Raman
29 July 2021, 8:47 pm
Quick Share

கோவை: கோவையில் 13 வயது சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள குரும்பப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது இரண்டாவது மகன் ப்ரித்திவ்ராஜ்(13) கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இருதய கோளாறு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்னும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாத நிலையில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவான நிலையில் மேற்கொண்டு பணம் இல்லாமல் தவித்து வரும் அக்குடும்பத்திற்கு அந்த ஊர் இளைஞர்கள் உட்பட பலரும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.அக்கிராம இளைஞர்கள் வீடு வீடாக சென்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் நிதியை திரட்டி வருகின்றனர். இது குறித்து பேட்டியத்த சிறுவனின் தந்தை விஜயகுமார், அறுவை சிகிச்சைக்கு 25 லட்சம் தேவைப்படும் நிலையில்,

ஏற்கனவே இதுவரை சுமார் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகி உள்ளதாகவும், காப்பீட்டு திட்டமும் அங்கு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நிதி திரட்டி உதவி வருகின்றனர் என்றும் அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து பேசிய செந்தில்குமார் (ஊர்பொதுமக்கள்) எங்களால் முடிந்தவரை நிதியை திரட்டி வருகிறோம் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

Views: - 110

0

0