ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரால் மக்கள் கடும் அவதி: ரயில்வே நிர்வாகம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

9 July 2021, 2:56 pm
Quick Share

திண்டுக்கல்: தொடர் மழை காரணமாக கொடைரோடு அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரால் அப்பகுவழியாகச் செல்லும் 10-க்கு மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளவதால் ரயில்வே நிர்வாகம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஜெய்ப்பட்டி பிரிவு வழியாக ஜல்லிபட்டி, அழகம்பட்டி, கொழிஞ்சிபட்டி, நாயனம்பட்டி, சில்லலப்பட்டி உட்பட 10-க்கு மேற்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் ரயில்வே சுரங்க பாலத்தின் அடியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக தேங்கும் மழை நீரால் அப்பகுதி வழியாக விவசாயப்பொருட்களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் அரசு மற்றும் தனியார் பணிகளுக்குச் செல்லும் பணியாளர்கள் என பலரும் கலங்கிய மழை நீரில் இறங்கியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் கடந்த சில தினங்களாக தினமும் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மூழ்கிச் செல்லும் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் புகார் தெரிவித்தும், ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் எனவே உடனடியாக ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 101

0

0