சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

23 November 2020, 2:57 pm
Quick Share

திருப்பத்தூர்: சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான எஸ் டி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறி நாள்தொறும் ஒவ்வொரு வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்க தலைவர் லட்சுமணராஜா தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவருமான டில்லிபாபு கலந்துகொண்டு 2006 ஆம் ஆண்டு வன சட்டத்தை உடனே அமுல்படுத்தி பட்டா வழங்க வேண்டும், மலைவாழ் மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான எஸ் டி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், இஐஏ சுற்றுச்சூழல் திருத்த தாக்கல் மதிப்பீடு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அனைத்து பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் 500 க்கும்‌ மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 18

0

0